உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சி சாலைகளில் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வன விலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்றையதினம் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் 508,377 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சிறுவர் தினமான ஒரே நாளில் ஏனைய அனைத்து மிருகக்காட்சி சாலைகளும் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக விலங்கியல் திணைக்கள நிர்வாகம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று (4) அறிவித்தது.
அதன்படி, பின்னவல யானைகள் சரணாலயத்தில் 947,000 ரூபாவும், பின்னவல சரணாலயத்தில் 949,200 ரூபாவும் மற்றும் ரிதியகம சபாரி பூங்காவில் 856,000 ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
தேசிய விலங்கியல் திணைக்களம் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிட அனுமதித்துள்ள போதிலும், இவ்வளவு அதிக வருமானம் ஈட்டப்படுவது இதுவே முதல் முறை என தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகந்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment