சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் பிரதி சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட தெரிவுக் குழுவினரால் பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய சட்டவாக்க நிலையியற் குழு
மொஹான் பிரியதர்ஷன த சில்வா
சிசிர ஜயகொடி
ஜீ.எல். பீரிஸ்
ராஜித சேனாரத்ன
தயாசிறி ஜயசேக்கர
நாலக கொடஹேவா
பைஸால் காசிம்
அஜித் மான்னப்பெரும
ஜயந்த சமரவீர
கோவிந்தன் கருணாகரம்
இம்ரான் மஹ்ரூப்
கோகிலா குணவர்தன
பிரேம்நாத் சி. தொலவத்த
மதுர விதானகே
ஜயந்த வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment