கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழு தலைவருக்கான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பின் ரஞ்சித் பண்டாரவுக்கு ஆதரவாக 15 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்னவுக்கு ஆதரவாக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, அரச கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவராக நேற்றையதினம் எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஏகமனதாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கபீர் ஹாசிம் கோபா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment