மதுபானம், சிகரெட் விலைகள் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

மதுபானம், சிகரெட் விலைகள் அதிகரிப்பு

முதலாம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானம் மற்றும் சிகரெட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

DCSL நிறுவனத்தினால் அனைத்து மதுபான வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 750 மில்லி லீற்றர் விசேட மதுபான போத்தலொன்றின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஏனைய மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிகரெட்டுக்களின் விலைகளை முதலாம் திகதி நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலைநிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க கோல்ட் லீப் மற்றும் பென்ஸன் என்ட் ஹேஜஸ் ஆகிய சிகரெட்டுக்களின் விலைகளே ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோல்ட் லீப் சிகரெட் ஒன்றின் விலை 85 ரூபாவாகவும் பென்ஸன் என்ட் ஹேஜஸ் சிகரெட் ஒன்றின் விலை 90 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு வரியானது இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் அதற்கிணங்கவே மேற்படி இருவகை சிகரெட்டுக்களின் விலைகளை ஐந்து ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நிறுவனத்தின் ஏனைய தயாரிப்புகளான சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment