முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

(எம்.வை.எம்.சியாம்)

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தரமசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில், நாம் 5 முதல் 6 லீற்றர் பெற்றோலை கொண்டு வாடகைக்கு முச்சகர வண்டி செலுத்துவதை விடுத்து வீட்டு வேலைகளுக்கு கூட பயன்படுத்துவதற்கு போதாது.

எனினும் வீதிகளில் முச்சக்கர வண்டிகள் ஏராளமாக ஓடுகின்றன. எப்படி நாம் தொழிலை மேற்கொள்வது. ஏனையவர்களுக்கு 450 ரூபாவிற்கு பெட்ரோல் வழங்கும் போது நாங்கள் 500 அல்லது 550 ரூபாவிற்கு பெட்ரோலை பெற்றுக் கொள்கிறோம்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு கையில் எதுவும் கொடுத்து, வேறொருவரின் கிவ்.ஆர் குறியீட்டை பயன்படுத்தி பெட்ரோலை பெற்றுக் கொண்டுதான் இந்த தொழிலை செய்து வருகிறோம்

இந்த சூழலில் 40 ரூபாய் விலை குறைப்பின் ஊடாக எமக்கு முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான பெட்ரோல் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment