போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய படைப்பிரிவொன்றை நியமிக்க நடவடிக்கை - விஜேதாச ராஜபக்ஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய படைப்பிரிவொன்றை நியமிக்க நடவடிக்கை - விஜேதாச ராஜபக்ஷ்

(எம்.ஆர்.எம்.வசீம்)

போதைப் பொருள் கடத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் அதன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக புதிய படைப்பிரிவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இளைஞர் சமூகத்தை நச்சுத்தன்மை உள்ள போதைப் பொருள் மற்றும் அபாயகர ஒளடதங்கள் பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்காக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்டமா திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டடிருந்த இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்கள் பாரியளவில் அதிகரித்து செல்கின்றது. இதனை கட்டுப்பத்துவதற்காக, போதைப் பொருள் விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய படைப்பிரிவொன்றை அமைக்க இருக்கின்றோம்.

அதேபோன்று இளம் சமூகத்தினர் போதைப் பொருள் பயன்படுத்துவதற்காக செல்வதை தடுப்பதை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்படும் தேசிய கொள்கைக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

அத்துடன் நாட்டின் இளம் சமூகத்தினர் மத்தியில் அபாயகர ஒளடத பயன்பாடு வேகமாக பரவி வருகின்றது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களில் பெரும்பாளானவர்கள் 20, 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாகும்.

இந்த நிலைமையை விரைவாக கட்டுப்பத்தாவிட்டால், எதிர்வரும் சில வருடங்களுக்குள் இலங்கையில் இளம் பிரவினரில் அதிகமானவர்களின் சுகாதார நிலைமை மோசமடைந்து குடும்ப வாழ்க்கை சீரழிந்து, ஒழுக்கமற்ற சமூகவிராேத செயல்களுக்கு பெருமளவில் ஈடுபடும் சமூக சூழல் உருவாகும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் போதைப் பொருள் பயன்படுத்தியமை காரணமாக சிறைப்படுத்தப்படும் நபர்கள் புனர்வாழ்வு மற்றும் சமூக சீர்திருத்த செயற்பாடுகளின்பால் அனுப்புவது தொடர்பாக கூடிய அவதானம் செலுத்த வேண்டி இருப்பதுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்போம்.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் மத்தியில் தற்போது அபாயகர ஒளடத பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் தேசிய கொள்கை தயாரிக்கும்போது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை அறிவுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையினால் பாடசாலை மாணவர்களை அறிவுறுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தை செயற்படுத்துவதற்காக கல்வி அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட பிரிவினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment