கையடக்கத் தொலைபேசிகள், உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

கையடக்கத் தொலைபேசிகள், உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கலாம்

கையடக்கத் தொலைபேசிகள், உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வருடாந்தம் பத்து மில்லியனிற்கு மேல் வருமானம் ஈட்டும் இறக்குமதியாளர்கள் மீதே வரி விதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதான இறக்குமதியாளர்கள் தங்கள் பொருட்களை வியாபாரிகளிற்கு விற்பனை செய்யும்போது வரிகளை இணைத்து விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளும் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிற்கு விற்பனை செய்யும்போது வரிகளை சேர்க்கின்றனர் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் 2 வீத சமூக பாதுகாப்பு வரியையே அறிவித்தது ஆனால் பொருள் வாடிக்கையாளரை சென்றடையும்போது அது ஐந்து வீதமாக காணப்படும் இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும் அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமை இன்னமும் குழப்பகரமானதாக உள்ளது அரசாங்கத்தினால் வரிகளை மாத்திரம் அதிகரிக்க முடியும் தேசிய பொருளாதார பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment