பால் தேநீர் கோப்பையின் விலை ரூ. 100 ஆகவும், தேநீர் கோப்பையின் விலை ரூ. 30 ஆகவும் குறைக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக, அச்சங்கத்தின் அழைப்பாளர் அசேல சம்பத் அறிவித்துள்ளார்.
அதற்கமைய இதுவரை, ஒரு கோப்பை ரூ. 120 ஆக இருந்த பால் தேநீர் மற்றும் ரூ. 50 ஆக இருந்த தேநீரின் விலைகள் ரூ. 20 இனால் குறைக்கப்படுவதாக, சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இன்றையதினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டதை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, குறித்த விலையிலும் பார்க்க அதிகமாக விற்பனை செய்யும் உணவகங்களை அடையாளம் காணுமாறு, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வர்த்தக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தவாறு, கோதுமை மாவின் விலை ரூ. 250 இற்கு கொண்டு வரப்படுமாயின், உணவகங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளின் விலைகளை குறைக்க தயாராகவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment