பெளதீகவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

பெளதீகவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான பெளதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் பெளதீகவியலுக்கான நோபல் பரிசை தேர்வு குழு நேற்று (04) அறிவித்தது. 

அதன்படி, பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜோன் கிளாசர், அவுஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு பெளதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் விஞ்ஞானம் ஆகிய ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (05) இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment