தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்க இடமளியுங்கள் : அனுர பஸ்குவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்க இடமளியுங்கள் : அனுர பஸ்குவல்

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கில் தீ வைத்ததை போன்று தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம். தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள். தவறான நிலைப்பாட்டை குறிப்பிட்டு மாணவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பஸ்குவல் தெரிவித்தார்

பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (04) நடைப்பெற்ற நிதி அமைச்சின் வரிச் சலுகைகள் மற்றும் சில வரிச் சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மாணவர் அடக்குமுறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்துரைத்தார். உத்தேவமாக உரையாற்றி மாணவர்களை தவறாக வழிநடத்த வேண்டாம். வடக்கில் தீ வைத்து விட்டு தற்போது தெற்கில் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம்.

தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள். அதனை விடுத்து மாணவர்களை குழப்பமடைய செய்து அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டாம். நீங்கள் கல்வி கற்கும் காலத்தில் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

மாணவர்களை சிறைக்கு அனுப்பும் வகையில் நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம். அதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் சந்ததியினர் வடக்கில் இதனையே செய்தார்கள். மாணவர் போராட்டம் என்ற பெயரில் கடந்த காலங்களில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகளே இடம்பெற்றன என்றார்.

No comments:

Post a Comment