முழுமையான கூரைகள் இன்றி பாடசாலைகள் இயங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல பாடசாலைகள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இயங்குகின்றன, ஆனால் முழுமையான கூரைகள் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு தேசம் என்ற அடிப்படையில் எங்கள் முன்னுரிமைகள் எவை என்பதை நாங்கள் மீள்மதிப்பீடு செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.
எங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் மாத்திரமில்லை, அரசியல் சமூக சீர்திருத்தமும் அவசியம் என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment