மஹிந்தவை இந்தியாவுக்கு அழைக்கவுள்ள சுப்பிரமணியன் சுவாமி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

மஹிந்தவை இந்தியாவுக்கு அழைக்கவுள்ள சுப்பிரமணியன் சுவாமி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

எனது நண்பரும், இலங்கை தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை புதுடில்லியில் பொது நிகழ்வொன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.

அவர் மழைக் காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment