இலங்கையின் கடன் நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக மாற்றமடைந்து கொண்டுள்ள நிலையில் இலங்கை தனது அயல் நாடுகளிடமிருந்து உணவு உதவியை கோரியுள்ளது.
சார்க் அமைப்பினால் இயக்கப்படும் உணவு வங்கியிடமிருந்து உதவியை பெறுவதற்காக இலங்கை விண்ணப்பித்துள்ளது.
சார்க்கின் உணவு வங்கி சார்க் நாடுகளிற்கு ஏற்கனவே அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை அவசரமான நிலையின் போது வழங்கியுள்ளது.
சார்க் அமைப்பினால் வழங்கப்படும் உதவியை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் உணவு ஆணையாளர் ஜே கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாங்கள் சார்க்கின் உணவு வங்கியை உதவிக்காக தொடர்பு கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சார்க்கின் உணவு வங்கி அமைப்பிடமிருந்து 100000 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களை மானியமாக அல்லது அன்பளிப்பாக எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment