இலங்கையில் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு : விலைப்பட்டியல் உள்ளே - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

இலங்கையில் மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு : விலைப்பட்டியல் உள்ளே

நாட்டில் அனைத்தும் மதுபான போத்தல்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு மதுபானங்களின் விற்பனை விலையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்ததை தொடர்ந்து இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விற்பனை விலை அதிகரிப்பட்டுள்ளன.

அதற்கமைய 750 மில்லி லீற்றர் மதுசாரத்தின் விலை 520 ரூபாவினாலும்,180 மில்லி லீற்றர் மதுசாரத்தின் விலை 130 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

750 மில்லி லீற்றர் மதுசாரத்தின் புதிய விலை 2500 ரூபாவாகவும்,180 மில்லி லீற்றர் மதுசாரத்தின் விலை 680 ரூபா எனவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.பெரிய பியர் போத்தல் மற்றும் பியர் டின் 30 ரூபாவினாலும்,சிறிய பியர் டின் 20 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment