அரச ஊழியர்களுக்கு பிரதி வெள்ளிதோறும் விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Monday, June 13, 2022

அரச ஊழியர்களுக்கு பிரதி வெள்ளிதோறும் விடுமுறை

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடிகளையடுத்து அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது. இதற்கு அமைய இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment