பாடசாலை நாட்களை குறைக்கும் முடிவு எதுவுமில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, June 13, 2022

பாடசாலை நாட்களை குறைக்கும் முடிவு எதுவுமில்லை

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாடசாலை நாட்களை குறைப்பது தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அவர், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார். 

ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளது.

எனினும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment