சி.ஐ.டியில் சரணடைந்தார் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

சி.ஐ.டியில் சரணடைந்தார் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

மே 09 ஆம் திகதியன்று கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் சந்தேக நபராக கஹந்தகம குறிப்பிடப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவருடன் இந்த வழக்கில் சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அவர்கள் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

கஹந்தகம, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள், அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment