இலங்கையின் தற்போதைய நிலை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம் : சவாலான இக்காலத்தில் ஆதரவு வழங்குமாறு அமைச்சர் பீரிஸ் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம் : சவாலான இக்காலத்தில் ஆதரவு வழங்குமாறு அமைச்சர் பீரிஸ் கோரிக்கை

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள இராஜதந்திர உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.

இன்று (02) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனது உரையின் போது, இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முனனெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக் கொண்டார். 

அவர் தனது உரையில், பாராளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தையும் குறிப்பிட்டதுடன், இந்த முக்கியமான சட்டத்தின் சில முக்கிய அம்சங்களையும் சுட்டிக் காட்டினார்.

இராஜதந்திர உறுப்பினர்களின் பங்கேற்பிற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் குறிப்பாக சவாலான ஒரு கட்டத்தில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு தூதுவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் சுருக்கமான விளக்கங்களை முன்வைத்து கேள்விகளுக்கு பதிலளித்தனர். இந்த மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவும் இணைந்திருந்தார்.

No comments:

Post a Comment