இன்று பிற்பகல் வவுனியா ஈரப்பெரிய குளத்தில் நீராடுவதற்காக, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த நால்வர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், குளத்தில் நீராடிக் கொண்டிருந்த நால்வரில் இருவர் நீரில் மூழ்கினர். இதை அவதானித்த மற்றைய இருவரும் அவர்களை காப்பாற்ற முற்பட்டபோது அவர்களும் மூழ்கினர்.
இதையடுத்து அவர்கள் அழைத்துச் சென்ற வளர்ப்பு நாய் இருவரையும் காப்பாற்றி குளத்தின் கரைக்கு அழைத்து சென்றதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட பொலிசார், நீண்ட நேரத்தின் பின்னர் 15 வயதான நதீச விதுசர, 16 வயதான கைலாஸ் ஆகிய காணாமல் போன இருவரினதும் சடலங்களை மீட்டுள்ளனர்.
சடலங்கள் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஓமந்தை விஷேட நிருபர்
No comments:
Post a Comment