மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் சந்தேக நபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் சந்தேக நபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மே 09 அமைதியின்மை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் மஹிந்த கஹந்தகம ஆகியோரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அலரி மாளிகைக்கு அருகாமையிலும், காலி முகத்திடலிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களாக இவர்கள் பெயரிடப்படவுள்ளதாக சட்டமா அதிபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இன்று கோட்டை நீதவான் திலின கமகேவிடம் அறிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அலரி மாளிகையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் இரண்டு உளநல நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மே 9 சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்த மற்றும் மிலான் பெர்னாண்டோ ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 சந்தேகபர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவின் ஆசிரிய தொழிற்சங்க தலைவி வசந்தா ஹந்தபான்கொடவும் இவர்களில் அடங்குகின்றார்.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் இன்று skype ஊடாக மன்றில் தோன்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment