மின்சார பட்டியலுக்கு மாதம் ஒரு சிலிண்டர் : லிற்றோ நிறுவனம் புதிய திட்டம் வகுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

மின்சார பட்டியலுக்கு மாதம் ஒரு சிலிண்டர் : லிற்றோ நிறுவனம் புதிய திட்டம் வகுப்பு

மின்சார கட்டண பட்டியலை அடிப்படையாக வைத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் சிலர் பல சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்து அதை ஒரு வியாபாரமாக செய்வதை நிறுவனம் அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் மேற்படி வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை தற்போது தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: நெருக்கடியான தற்போதைய சூழ்நிலையில் சிலர் பல சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்து அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு வினியோகத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்புபட்டுள்ளதால் குழப்ப நிலைகள் உருவாகின்றன. அதனால் மக்கள் சமையல் எரிவாயுவை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment