மேல் கொத்மலை நீர்த் தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

மேல் கொத்மலை நீர்த் தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேகத்திலிருந்து இன்று (31.05.2022) பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர்த் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்துவிட்டு நீர்த் தேக்கத்தில் எறிந்துவிட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment