களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தந்தை வீட்டில் நாற்காலியில் சடலமாக காணப்பட்டதாகவும், மகள் வீட்டின் அறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் நேற்று இரவு களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த மரணங்கள் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment