நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை நாளை (01) காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அத்தனகல ஓயா, ஜின் கங்கை நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment