மஹிந்த இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - சமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

மஹிந்த இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - சமல் ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரரும், பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

"கிட்டத்தட்ட 50 ஆண்டு கால அவரது சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், மக்கள் சரியான நேரத்தில் விட்டுக் கொடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

"நாம் அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கு பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment