விசுவமடுவிலிருந்து ”கோட்டா கோ கம” நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

விசுவமடுவிலிருந்து ”கோட்டா கோ கம” நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம்

கொழும்பு காலி முகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர்.

கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு பயணத்தை ஆரம்பித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் “கோட்டா கோ கம” போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

4 நாட்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்து “கோட்டா கோ கம” விற்கு சென்றடைய உள்ளதாகவும் தெரிவிக்கும் அவருக்கு மக்கள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment