பகலுணவை இடை நிறுத்தும் கோரிக்கை செயற்படுத்தப்படும் : அரச அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உரையாற்றுவதை தவிர்க்கவும் - சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

பகலுணவை இடை நிறுத்தும் கோரிக்கை செயற்படுத்தப்படும் : அரச அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உரையாற்றுவதை தவிர்க்கவும் - சபாநாயகர்

(எம்.ஆர்.எம். வஸீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும். ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது சபை நடவடிக்கை ஆரம்பத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் தமக்கு பாராளுமன்றினால் வழங்கப்படும் பகலுணவை இடைநிறுத்துமாறு விடுத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அக்கோரிக்கை செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவு குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்படும்.

பாராளுமன்றத்திற்கு வருகை தர அனுமதி வழங்கப்படாத அரச உயர் அதிகாரிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரச அதிகாரிகள் தொடர்பில் பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஆற்றப்படும் உரை குறித்து அரச அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

அரச அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சபையில் உரையாற்றுவதை உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் அரச அதிகாரிகளுக்கு இழைக்கும் அநீதியாக கருதப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment