(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யினரால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹங்வல்லை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், தெஹிவளை - கல்கிசை மாநகர சபை பெண் உறுப்பினர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
குறித்த மாநகர சபை உருப்பினர் பொல்காவலை பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யினர் கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை (20) நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னி ஆரச்சி மற்றும் அவரது கணவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோரிடம் இன்று மாலை சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த இருவரும் இன்று மாலை சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
No comments:
Post a Comment