(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆளும் தரப்பின் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள வேளையில் ஒருவேளை உணவை பெற்றுக் கொள்வதில் கூட பெரும்பாலான மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 900 பாராளுமன்ற சேவையாளர்களுக்கான பகலுணவிற்கு மாத்திரம் பெருந்தொகை நிதி செலவிடப்படுகிறது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது முழு நாளும் விவாதம் இடம்பெறும் நாட்களில் உணவகங்களின் விலைக்கமைய உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
நாட்டுமக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இறுதி தீர்வு காணும் வரை இந்த கோரிக்கையை செயற்படுத்தமாறு வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment