அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் இன்னமும் அதிகரிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் இந்த மிகையான வாழ்க்கைச் செலவில் அன்றாடத் தேவைகளை அவர்களால் எவ்வாறு பூர்த்தி செய்துகொள்ள முடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, இன்றளவிலே ஆளுந்தரப்பினர் பல்வேறு விடயங்களைக் கூறினாலும் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் இன்னமும் அதிகரிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் இந்த மிகையான வாழ்க்கைச் செலவில் அன்றாடத் தேவைகளை அவர்களால் எவ்வாறு பூர்த்தி செய்து கொள்ள முடியும்?
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பதில் எவ்வித பயனுமில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது.
பாடசாலைப் போக்குவரத்து வாகனங்கள் இயங்குவதற்கு எரிபொருள் இல்லாத நிலையில், மாணவர்களால் எவ்வாறு பாடசாலைக்குச் செல்ல முடியும்? இவ்வாறானதொரு அரசியலில் ஈடுபடுவது குறித்து நாமும் வெறுப்படைந்திருக்கின்றோம்.
ஆனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் மோசமானவர்கள் அல்ல. நாட்டுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணமுடைய பலர் இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment