அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (20) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளையதினம் (20) முதலாம் தவணையின் 1ஆம் கட்டத்தை நிறைவு செய்து நாளையதினம் விடுமுறை வழங்கப்படவிருந்த நிலையில், இன்றையதினம் முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் திங்கள் (23) முதல் ஜூன் 01 வரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் ஜூன் 06ஆம் திகதி திங்கட்கிழமை, 2022 கல்வியாண்டிற்கான முதலாம் தவணையின் 2ஆம் கட்டத்திற்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து பிரச்சினையை கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment