தவறான படத்துடன் பொய்யான செய்திகள் பாராளுமன்றத்துக்கு மஹிந்த ஹெலிகொப்டரில் வரவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 19, 2022

தவறான படத்துடன் பொய்யான செய்திகள் பாராளுமன்றத்துக்கு மஹிந்த ஹெலிகொப்டரில் வரவில்லை

பாராளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரின் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்துள்ளது.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின், முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதாநாத் காசிலிங்கம், மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் ஹெலிகொப்டரில் அவர் பாராளுமன்றுக்கு வரவில்லையென்றும் வீதி வழியாகவே அவர் பாராளுமன்றத்துக்கு வந்ததாகவும் கூறினார்.

மேலும் சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படம் பழையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment