நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் - உதயகுமார் - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, March 6, 2022

demo-image

நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் - உதயகுமார்

.com/img/a/
இந்த நாட்டுக்கு சாபக்கேடாக அமைந்துள்ள பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் நேற்று (06) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, பயங்கரவாத தடைச் சட்டத்தால் வடக்கு, கிழக்கு மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது மலையக இளைஞர்களுக்கு எதிராகவும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. 

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் கூட இன்னும் வழக்கு தொடுக்கப்படாமல் பல வருடங்களாகியும் சிறைகளில் வாடுகின்றனர்.

வேலை தேடி கொழும்புக்கு சென்ற மலையக இளைஞர்கள், வடக்கு, கிழக்கு மக்களுடன் நட்பை பேணியவர்களுக்கு எதிராகவும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. இதனால் பலரின் வாழ்க்கை சூனியமாகியுள்ளது. 

எனவே, இப்படியான சாபக்கேடான சட்டம் நாட்டுக்கு தேவையில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட இதனையே வலியுறுத்தியுள்ளது. எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *