நாட்டில் தற்போது எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை : டிஜிட்டல் உலகில் நாம் கல்வியில் பின்னோக்கி நிற்கின்றோம் - கிண்ணியாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

நாட்டில் தற்போது எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை : டிஜிட்டல் உலகில் நாம் கல்வியில் பின்னோக்கி நிற்கின்றோம் - கிண்ணியாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என்று பதவிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் சகல பாதுகாப்பையும் அடித்து உடைத்து முடக்கி விட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் இன்று (4) நடைபெற்ற தொழில்நுட்ப ஆய்வு கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், இந்த நாட்டிலே தேசிய பாதுகாப்பு இல்லை, நாட்டுக்கு மக்களுக்கு பாதுகாப்பில்லை, சமையல் எரிவாயுக்கு பாதுகாப்பில்லை, உணவுக்காக வரிசையில் நிற்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று தொடர்ச்சியாக நாங்கள் பாதுகாப்பில்லை பாதுகாப்பில்லை என்று ஒவ்வொரு விடயத்திலும் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இன்று டிஜிட்டல் உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கல்வி துறையில் மிகவும் பின்னோக்கி நிற்கின்றோம். நாட்டை மாற்றியமைக்க கூடிய ஒரு பெரிய சக்தி கல்வி சக்தியாகும். இந்த நாட்டின் கல்வித்துறையில் அதிக குறைபாடுகள் காணப்படுகின்றன. பிற நாடுளுடன் ஒப்பிடும் போது நமது கல்வி முறையானது இன்னும் பல படிநிலைகளில் முன்னோக்கி வர வேண்டியுள்ளது. 

நாங்கள் ஆட்சியில் இல்லை, அரசாங்கத்தில் இல்லை எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். அதனால் நாங்கள் ஒரு மூளையில் முடங்கி கொண்டிருக்கவில்லை. 

நாட்டுக்கு என்ன சேவை அவசியம் தேவை, நாட்டில் பொருளாதாரத்தினை எப்படி கட்டியெழுப்புவது, இளைஞர்களுக்கு ஒரு சந்தை வாய்ப்பை எப்படி பெற்றுக் கொடுப்பது போன்ற திட்டங்களை நாங்கள் வகுத்து செயல்படுத்தி வருகின்றோம்.

பிரபஞ்சம் என்ற தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் பாடசாலை மாணவர்களின் கல்வி அறிவை தொழில்நுட்ப ரீதியாக மாற்றம் செய்வதற்கு கிராமங்கள் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். 

இந்த வகையில் இன்று இந்தப் பாடசாலைக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அதுமட்டுமன்றி, திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளுக்கு உதவிகளை நாங்கள் இன்று செய்திருக்கிறோம்.

இந்த நாட்டிலே வாழ்கின்ற மக்கள் தற்போது சமமாக மதிக்கப்படுவதில்லை. செல்வாக்கும் அரசியல் பக்கபலமும் அவர்களுடைய தேவைகளையும் சேவைகளை நிர்ணயிக்கின்றன. 

இதிலிருந்து மக்களை மீட்பதற்கு எதிர்கால சந்ததியினர் மத்தியில் நல்ல கல்விமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கல்வியின் மூலமே மக்களுக்கு விழிப்பூட்டல் விழிப்புணர்வு செய்ய முடியும் என அவர் தெிவித்தார்.

(கிண்ணியா கியாஸ்)

No comments:

Post a Comment