பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சா பாலோ நகரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குடல் அடைப்பு காரணமாக ஜெயிர் போல்சனரோ கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், இதனால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து ஜெயிர் போல்சனரோ அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நிர்வாகம் நேற்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், சிகிச்சைக்கு பின் போல்சனரோவின் உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குடல் அடைப்பு பிரச்சினைக்காக ஜெயிர் போல்சனரோவுக்கு அறுவை சிகிச்சை தேவையா, அவர் எப்போது ‘டிஜ்சார்ஜ்’ செய்யப்படுவார் போன்ற விவரங்களை வைத்தியசாலையில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயிர் போல்சனரோவின் வயிற்றில் ஒருவர் கத்தியால் குத்தியதும், அந்த சம்பவத்துக்கு பின் அவருக்கு 4 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment