இணைய வேகத்தில் உலக சாதனை படைத்த ஜப்பான் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 12, 2025

இணைய வேகத்தில் உலக சாதனை படைத்த ஜப்பான்

ஜப்பானிய பொறியாளர்கள் 1.02 பெட்டாபிட்ஸ் வேகத்தை எட்டி, இணைய வேகத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். 

1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும். 

இது அமெரிக்காவின் சராசரி இணைய வேகத்தை விட தோராயமாக 3.5 மில்லியன் மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சுமிடோமோ எலக்ட்ரிக் ஆகியவற்றை சேர்ந்த பொறியாளர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இணையம் இந்த வேகத்தை எட்டியதன் மூலம் ஒரே நேரத்தில் 10 மில்லியன் 8K ஒளிபரப்பு சேனல்களை இயக்க முடியும். 

மேலும், எந்தவிதத் தாமதமும் இல்லாமல் உலகளாவிய நேரடி ஒளிபரப்புகளையும் இது சாத்தியமாக்கும். சினிமா நூலகங்கள் போன்ற பெரிய கோப்புகளை பதிவிறக்க சில வினாடிகள் மட்டுமே போதும்.

ஆனால் இத்தகைய வேகங்களை கையாள என்ன மாதிரியான உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இத்தகைய வேகங்களை அடையவும் விநியோகிக்கவும் ஆகும்.

தொழில்நுட்ப செலவு மிக அதிகமாக இருக்கும், அனைவராலும் இதை அணுக முடியாது. 

கூடுதலாக, அதிக தரவு பரிமாற்ற வேகங்களுக்கு, சைபர் குற்றவாளிகளிடமிருந்து முக்கியமான தகவல்களை பாதுகாக்க மேம்பட்ட சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment