ஜனாதிபதி மற்றும் அவரது அரசின் அரசியல்வாதிகள் தங்களுக்குரிய சலுகைகளை விட்டுக் கொடுத்து நாட்டில் நடந்து கொண்டிருந்த ஊழல்களை நிறுத்தி அதன் மூலமும் சேமித்த பணத்தில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்று கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு அந்தப் பணத்தை ஒதுக்கியதாக கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
பசுமை விவசாயத்தைக் கொண்டு வருவதற்காக ஜனாதிபதி முடிவெடுத்து அதற்காக சேதனப் பசளை சிந்தனையை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்காக மிகப் பெருமளவு பணம் செலவளிக்க வேண்டி இருப்பதாலாகும். அவற்றை நிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
எனினும் சேதனப் பசளைத் திட்டம் நாட்டில் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் அது ஆரம்பித்த நேரத்தில் இருந்து ஏராளமான விமர்சனங்கள் அதை நோக்கி வந்ததாகவும் தெரிவித்தார்.
திவுலப்பிட்டிய தேர்தல் தொகுதியிலே பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த நிலப் பகுதியில் 95% பகுதி சேதனப் பசளைகள் பயன்படுத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அது தற்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்களை அடகு வைத்து மக்களைப் பலி கொடுத்து அதன் மூலம் சொகுசான வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இருந்ததாகவும் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசு எந்த நிலையிலும் அப்படி செயற்படவில்லை என்றும் அரசு எப்பொழுதும் இந்த நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து செயற்படுவதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
மின்சாரம் இல்லாத, மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார வசதி இல்லாத திவுலப்பிட்டிய பிரதேசத்தில் வாழும் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு பேசினார். இந்நிகழ்வு திவுலப்பிட்டிய, மரதகஹமுல அலுவலகத்தில் இடம் பெற்றது.
மின்சாரம் இல்லாத, மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார வசதி இல்லாத திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கு இலவசமாக மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. "உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்" வேலைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதற்கு முதலும்.மின்சாரம் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிகவில் திவுலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்கள் பத்மசிறி ஆரியதிலக, குசுமலதா கொடிகார, சித்ரா அமரசிங்க, மீரிகம பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பீ. தம்மிக சுபசிங்க மற்றும் திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் குசுமசிறி பொன்சேகா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்
No comments:
Post a Comment