டிக்டொக் காணொளி தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் 17 வயதான இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (03) பிற்பகல் மாதம்பிட்டி பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் வெல்லம்பிட்டியபகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன் மாதம்பிட்டி வீதி வழியாகச் சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு குழுவினரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தத இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
டிக்டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாக, சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்டொக் செயலி கடந்த இரண்டு வருடங்களாக விரைவாக வளர்ச்சியடைந்து வருவதுடன், இலங்கையிலும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாகவும் உள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாகவுள்ளது.
No comments:
Post a Comment