இந்திய பிரதமருக்கு ஆவணம் அனுப்பி வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது : முஸ்லிம் மக்கள் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்கிறார் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 1, 2022

இந்திய பிரதமருக்கு ஆவணம் அனுப்பி வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது : முஸ்லிம் மக்கள் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள் என்கிறார் தினேஷ்

இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் சம்மதம் தெரிவிக்கமாட்டார்களெனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு ஆவணம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்லவென குறிப்பிட்ட அமைச்சர் தினேஷ், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாதென்றும் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்றும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தமையினாலேயே இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்ததென்றும் வன்முறைகள் தொடங்கின என்றும் அவர் கூறினார். 

கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment