நாட்டில் டிசம்பர் மாதம் வரை அடையாளம் காணப்பட்ட, 41 ஒமிக்ரொன் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
177 மாதிரிகளில் 41 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் சிகிச்சையளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் சிலருக்கு சிகிச்சை மையங்களில் சிகிச்சையளிக்கப்படுவதுடன் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டில் மக்கள் தமது கடமைகளை செவ்வனே முன்னெடுத்துச் செல்ல நாடு முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒமிக்ரோன் போன்ற புதிய வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் பரவி வருகின்றதை மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரிக்க கூடுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment