முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு 24 மணி நேரத்தில் 2,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதையும் தீவிரப்படுத்தி வருகிறது.
தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடு ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விதித்துள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத குடிமக்கள் ஜனவரி 10ம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய அவசர நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘கொரோனா தடுப்பூசி போடப்படாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் பயணம் செய்வதற்கு ஜனவரி 10ம் திகதி முதல் தடை விதிக்கப்படும்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment