ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசிவழங்கல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசிவழங்கல் ஆரம்பம்

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நேற்று சனிக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே ஆகியோரின் பங்குபற்றலுடன் ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கான தடுப்பூசி வழங்கல் ஆரம்பமாகியது.

ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் 4 கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இந்த வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு நேற்று சனிக்கிழமை மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டது.

மூன்று மற்றும் நான்காம் கட்டமாக கடந்த ஆண்டு ஜூன் 4 மற்றும் 17 ஆம் திகதிகளில் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளதோடு , கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment