தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

தெஹிவளை கடலில் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வளர்ப்பு மீன்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த, இரத்மலானை ரயில் நிலைய குடியிருப்பில் வசிக்கும் 58 வயதான நபரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலையின் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment