க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளிலும் பரீட்சை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது நீண்ட நாட்கள் நடக்கவிருக்கும் பரீட்சை என்பதால் இதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மட்டுமல்லாது அதற்கென வெவ்வேறு வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மாணவர்களை அனுமதித்ததன் பின்னர் அங்கு ஒதுக்கப்படும் விசேட பகுதிகள் பரீட்சை நிலையங்களாக செயற்படுமென சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment