இஸ்ரேல் நாட்டில் “ப்ளூரோனா” என்ற புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவன்சா ஆகிய இரண்டு வைரஸ்களின் தொற்று சேர்ந்து இந்த புதிய வகை தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ப்ளூரோனா” என்பது கொரோனாவின் மாறுபாடு என்று தகவல் வெளியான நிலையில், அது கொரோனா மாறுபாடு அல்ல, இரட்டை வைரஸ் தொற்று என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“ப்ளூரோனா” நோயின் சரியான அறிகுறிகள் குறித்து புதிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், இந்த நோய் ஒரே நேரத்தில் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரசின் அறிகுறிகளை காட்டும் என்று நம்பப்படுகிறது.
அதேசமயம், இஸ்ரேலில் “ப்ளூரோனா” கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை.
இரண்டு வைரஸ்கள் ஒரே நேரத்தில் மனித உடலில் ஊடுருவும்போது நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், “ப்ளூரோனா” குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
No comments:
Post a Comment