முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
பொரளையில் வைத்து கடுவலை பொலிஸாரால் துமிந்த நாகமுவ கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற பெயர்ப்பலகை போன்றதொன்றை தயாரித்தமையூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டமைக்காக துமிந்த நாகமுவவிற்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment