மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதி : அறிவித்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதி : அறிவித்தார் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ

நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார அழுத்தத்தை குறைத்து, மிகக் கடினமான காலப்பகுதியிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த நிவாரணப் பொதி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நிதி அமைச்சில் இன்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய,

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 87 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)

ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதம் முதல், ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூ. 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 40 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இதே மட்டத்திலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேச தொழில் அமைச்சுக்கு ஆலோசனை

சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ரூ.1,000 வழங்க தீர்மானம்

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் அனைத்து வரிகளிலிருந்தும் நீக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ ரூ. 80 வீதம், மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இம்மாதம் முதல் ரூ. 5,000 கொடுப்பனவு

விவசாயத்துறையை மேம்படுத்த, 20 பேர்ச் நிலத்திற்கு குறைவான வீட்டுத் தோட்டத்திற்கு ரூ. 5,000 கொடுப்பனவு; 20 - 01 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 10,000 கொடுப்பனவு

நெல்லின் கொள்வனவு உத்தரவாத விலை ரூ. 50 இலிருந்து ரூ. 75 ஆக அதிகரிப்பு

இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அதிகரித்த சம்பளத்தையும் இம்மாதம் வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்ததாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரம் நாளை (04) இடம்பெறவுள்ள அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து எதிர்பாருங்கள்...

No comments:

Post a Comment