ஆஸ்திரியாவில் பிறர் உதவியுடன் தற்கொலை செய்வதை அனுமதிக்கும் சட்டம் ஜனவரி 1 முதல் அமலாகியுள்ளது.
இதன் மூலம், தீவிர நோய்வாய்ப்பட்ட அல்லது நிரந்தரமாக பலவீன நிலையில் உள்ள பெரியவர்கள், இறப்பதற்காக உதவி பெற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
இந்த விவகாரம் தொடர்பான அரசியலமைப்பு நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, டிசம்பர் மாதம் அந்நாட்டு பாராளுமன்றம் புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஒவ்வொரு நோயாளியையும் இரண்டு மருத்துவர்கள் மதிப்பீடு செய்து, இந்த நடைமுறை கடுமையான ஒழுக்குமுறைகளுடன் கடைப்பிடிக்கப்படும்.
இந்த மருத்துவர்களின் ஒருவர், வலிநிவாரண மருத்துவ நிபுணராக இருக்க வேண்டும். மற்ற வசதிகள் இருக்கும்போது யாரும் இறப்பதைத் தேர்ந்தெடுக்காததை உறுதி செய்ய, வலிநிவாரண சிகிச்சையை உருவாக்க அந்நாட்டு அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தங்களின் வாழ்வை முடித்துக் கொள்ள வழிவகை செய்யும் ‘பிறர் உதவியுடன் மேற்கொள்ளப்படும்’ தற்கொலை, ஆஸ்திரியாவின் அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் சட்டபூர்வமாக உள்ளது.
No comments:
Post a Comment