நாட்டில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்றையதினம் ஒரு லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க மேல் மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை இன்னும் மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளடங்கிய கப்பலொன்று நேற்றையதினம் நாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதலே சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிகின்றது.
எவ்வாறெனினும் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment