கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நேற்று விடுவித்துள்ளது.
அதேவேளை அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவைப்படும் மீதமான தொகையை இன்றையதினம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை அங்கிருந்து விடுவிப்பதற்காக 14 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் நிலையில் நேற்றையதினம் மத்திய வங்கி அதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதாக வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment